Tuesday, December 24, 2019

15. வேஷக்கார தாத்தா (விஷமக்காரக் கண்ணன்) **




வேஷக்கார தாத்தா ரொம்ப பாசக்கார தாத்தா (2)

மண்ணில் பிரம்படி பட்டும் பித்தனென்று பேரெடுத்தும்
சும்மா-ஓரி..டத்திராமல் மண்மே..லவதரித்த
வேஷக்கார தாத்தா
(2)
ஆ .. பாசக்கார தாத்தா
(MUSIC)
நீண்ட-நேரம் மௌனமிருப்பார்

நீண்ட-நேரம் மௌனமிருப்பார்
பேசினாலோ வேதத்தை-ஓர் சொல்லில்-முடிப்பார் 
(2)
கூட-வரும் பக்தர்-முடி..யாது-என்று வண்டி-பூட்டி  (2)
நிற்கும்போது கல்லில்-முள்ளில் காலாலே-நடந்து செல்லும்
வேஷக்கார தாத்தா (2)
(MUSIC)
பக்கத்..தி..லே வரச்சொல்லுவார் 

பக்கத்..தி..லே வரச்சொல்லுவார்
என்னடா-முகம் வாடிப்போச்சு என்னாச்சு-என்பார்
(2)
ஒண்ணும்-தெ..ரியாதது-போல் எல்லாத்தையும் கேட்டுப்புட்டு (2)
அவரின் குறைகளைக் கேட்டுப்புட்டு ..
அவர்-சந்தோஷத்தில் விம்மும்படி அப்பவே தீர்வைத்-தருவார் 
வேஷக்கார தாத்தா
ஒண்ணும்-தெ..ரியாதது போல் எல்லாத்தையும் கேட்டுப்புட்டு
சந்தோஷத்தில் விம்மும்படி அப்பவே தீர்வைத்-தருவார் 
வேஷக்கார தாத்தா (2)

நம்மைப்-போல எண்ணக்கக்கூடாது (2)
அவர்க்கொன்றும் தெரியாதென்று எண்ணக்கூடாது 
அவர் சும்மா-என்று எண்ணக்கூடாது 
எண்ணிவிட்டால் கூட-அது கோபப் படாது 
சும்மா-ஒரு பேச்சுக்காக கதையைக்-கொஞ்சம்  சொல்லிவிட்டால்
உன்  கதையைக் கொஞ்சம் அவிழ்த்து விட்டால் 
உன் அம்மா, பாட்டி,அத்தை,தாத்தா அத்தனைபேர் கதையும் சொல்வார்
 வேஷக்கார தாத்தா
சும்மா-ஒரு பேச்சுக்காக கதையைக்-கொஞ்சம்  சொல்லிவிட்டால்
அம்மா, பாட்டி,அத்தை,தாத்தா அத்தனைபேர்  கதையும் சொல்வார்
 வேஷக்கார தாத்தா (2)
மண்ணில் பிரம்படி பட்டும் பித்தனென்று பேரெடுத்தும்
சும்மா-ஓரி..டத்திராமல் மண்மே..லவதரித்த
வேஷக்கார தாத்தா ஆ .. பாசக்கார தாத்தா








No comments:

Post a Comment