Friday, January 31, 2020

16 யாரிடம் இனி யாரிடம்(ஆலயம் அருளாலயம்) **




யாரிடம் இனி யாரிடம் (2)

நான் உய்வழி அடைய புகல்-எனப் போவது 
யாரிடம் இனி யாரிடம்
(2)
அய்யே .. அய்..யே
கலியில் தெய்வத்தை காணல் அரிது (2)
ஞானிகளும் இதை  உணர்ந்து சொன்னார்  (2)
 நேரில் தெய்வத்தை காணல் அரிது
ஞானிகளும் இதை  உணர்ந்து சொன்னார்
ஆயினும்  நான் நான் அதை  எளிதே (2)
உன் வடிவில் கண்டிருந்தேன்
ஆயினும்  நான் நான் அதை  எளிதே
உன் வடிவில் கண்டிருந்தேன்
என்று-இரு..மாந்திருந்தேன்
யாரிடம் இனி யாரிடம்
நான் உய்வழி அடைய புகல்-எனப் போவது 
 யாரிடம் இனி யாரிடம் ..
அய்யே .. அய்யே
குறைந்த என்-மதி நீ பொறுத்தாய்

குறைந்த என்-மதி நீ பொறுத்தாய்
நகைக்காமல் நீ தடுத்தணைத்தாய்
(2)
உனை-விடுத்து ஓர் கதியில்லை (2)
இனி எனக்கு வேறு-யார் குருநாதா
உனை-விடுத்து ஓர் கதியில்லை
இனி எனக்கு வேறு-யார் குருநாதா (2)
யாரிடம் இனி யாரிடம்
நான் உய்வழி அடைய புகல்-எனப் போவது 
 யாரிடம் இனி யாரிடம் ..
அய்யே .. அய்யே ..
வறுக்குதய்யே என்-வினை ஆயிரம் பொறுக்குதில்லை நீ அறிந்திலையோ
(2)
மறைகள் உணர்ந்தே பெரு நிலைதனை அடைந்தே (2)
 உய்வெங்கே அது எனக்கெங்கே 
அலைகள் ஓய்ந்து நான் குளிப்பது எங்கே
அது-எங்கே சொல் எனக்கெங்கே
சொல் அய்யே  நீ சொல்-மெய்யே   
யாரிடம் இனி யாரிடம்
நான் உய்வழி அடைய புகல்-எனப் போவது 
 யாரிடம் இனி யாரிடம் ..
அய்யே .. அய்யே
பெரியவா பெரியவா என்றுரைத்தலின் அறியா என்-மதி -ஏதறியும் (2)
வாராயோ எனைப் பாராயோ-நீ 
வாராயோ எனைப் பாராயோ
வாவா வாவா நான்-உன் குழந்தை
 அம்மா அம்மா காட்டுன் மடியே
யாரிடம் இனி யாரிடம்
நான் உய்வழி அடைய புகல்-எனப் போவது 
 யாரிடம் இனி யாரிடம் ..
அய்யே .. அய்யே
அய்..யே





No comments:

Post a Comment