Saturday, February 1, 2020

17. தும்பைப் பூவினை(வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாள்) **



தும்பைப் பூவினைப் போலச் சிரிப்பார்
தேனைப் பெய்யும் குரலில்-மொ..ழிவார்
(4)
(MUSIC)
  அன்னையவளின் குலவு-குரலில்
தேற்றும் வார்த்தையில்-நல்லதை உரைப்பார்
   (2)
தும்பைப் பூவினைப் போலச் சிரிப்பார்
தேனைப் பெய்யும் குரலில்-மொ..ழிவார்
(2)
(MUSIC)
ஆதியாம் தனை மூடி மறைத்தே
மனித வேடத்தில் நம்முடன் இருந்தார்
(2)
எண்-வரம்பற்ற வீடுகள்-தோறும் (2)
பூஜை அறைகளில் இறை வடிவானவர்
தும்பைப் பூவினைப் போலச் சிரிப்பார்
தேனைப் பெய்யும் குரலில்-மொ..ழிவார்
(2)
(MUSIC)
காஞ்சி மாநகர் வாசம் செய்தார்
தேவர் போற்றும் கயிலையின் பெம்மான்
(2)
லோக வாழ்வைக் கொண்டே இருந்தார்
நம்மில் நம்போல் நமச்சிவப் பெருமான்
(2)
தானும்-சொந்த நிலை தடுமாறி
அலையும் மனதை ஓர்-முகமாக்கி
(2)
ஈசனாமவர் அருகினில் உற்றால் (2)
சாந்தமாய் நமை-மாற்றி அமைப்பார் (2)
தும்பைப் பூவினைப் போலச் சிரிப்பார்
தேனைப் பெய்யும் குரலில்-மொ..ழிவார்
(2)



No comments:

Post a Comment