சாமியாரு இல்லே-அவர் சாமி-தானே அண்ணே
(SM)
சாமியாரு இல்லே-அவர் சாமி-தானே அண்ணே
பந்தி பரிமாறலில்லை திங்கறது சோறுமில்லே (2)
கைநிறையக் கூட-இல்ல நெல்லு-பொறி சாப்பிடுறார்
சாமியாரு இல்லே-அவர் சாமி-தானே அண்ணே
தூங்க-ஒரு பாயுமில்லை பஞ்சுத்-தல..காணி-இல்லை
தூங்க-நல்ல பாயுமில்லை பஞ்சுத்-தல..காணி-இல்லை
உல்லாசமாய்த் தலையில் கையை வச்சுத் தரையில் படுத்துக்குறார்
(2)
சாமியாரு இல்லே-அவர் நம்ம-சாமி அண்ணே (2)
அம்மா இதுவரையில் எப்பொழுதும் பார்த்ததில்லே (2)
இந்த-மஹா புருஷரைப்-போல் ஒருத்தரை-நான் பார்த்ததில்லே
சாமியாரு இல்லே-அவர் சாமி-தானே அண்ணே
நம்மளைப் போல் தானிருக்கார் நம்ம கூட வாழுகிறார்
(2)
சாமியாரைப் போலிருக்கார் சாமி போல அருளுகிறார் (2)
சாமியாரு இல்லே அவர்-நம்ம-சாமி அண்ணே (2)
காஞ்சிபுர நகரில் சங்கரரின் மடமொன்றுண்டு (2)
அதற்கு அவர்-பதியாம் அவரின்-சொத்து ஒரு தடியாம்
சாமியாரு இல்லே-அவர் சாமி-தானே அண்ணே
(MUSIC)
காஞ்சிபுர நகரில் சங்கரரின் மடமொன்றுண்டு
அதற்கு அவர்-பதியாம் அவரின்-சொத்து வெறும் தடியாம்
சாமியாரு இல்லே அ..வர்-நம்-சாமி அண்ணே (2)
பொன்னும் பொருளும்-ஐயன் காலடியில் குவிந்து விடும் (2)
அத்தனையும் மனம்-கனிவாய் வறியவர்க்கே உடனளிப்பார்
சாமியாரு இல்லே அவர் நம்ம-சாமி அண்ணே (2)
ஆ ..ஆ
மிச்சமுள்ள பழங்களையும் பக்தருக்கே தந்திடுவார்
(3)
ஞானப்பழம் தந்ததனால் பக்தர் பவம் விலகச் செய்வார்
சாமியாரு இல்லே-அவர் சாமி-தானே அண்ணே (2)
நானவரைப் பார்த்ததுமே கண்கொட்டாமெ பார்த்து நின்னேன் (2)
ஸ்வாமி-அவர் கண்களிலே அன்பு-மழை பொழியக் கண்டே (2)
சாமியாரு இல்லே-அவர்-நம்ம-சாமி அண்ணே
சாமியாரு இல்லே-அவர் சாமி-தானே அண்ணே
சாமியாரு இல்லே-அவர்-நம்ம-சாமி அண்ணே
சாமியாரு இல்லே சாமி-தானே
அண்ணே
சாமி-தானே அண்ணே …
No comments:
Post a Comment