Wednesday, April 12, 2017

2.3 ராமானுஜர்

ராமானுஜர், எண்ணற்ற க்ரந்தங்களை உலகுக்கு அளித்து சேவை புரிந்தார். எனினும், அவரின் விலை மதிப்பற்ற இரண்டு உலகளிப்பு , உலக உயிர்களித்து அளப்பரிய அவரது அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
1) ஓம் நமோ நாராயணாய என்ற திரு மந்திரத்தை, குருவின் கட்டளையையும் மீறி , எல்லோருக்கும் உபதேசித்து , தான் அழிந்தாலும், உலக மாந்தர் கடைத்தேற வேண்டும் என்ற அளப்பரிய அன்பை வெளிப்படுத்தினார்.
2) இரண்டற்ற ஒன்றே இறைவன் என்கிறது அத்வைதம். அந்நிலையில் இறைவனை உணர பாமரர்க்கு வழி ஏது என்ற கருணையினால் ராமானுஜர் செய்திட்ட விசிஷ்டாத்வைத  சித்தாந்தம் , தனக்கென ஒரு தெய்வத்தைத் தேர்ந்தெடுத்து வழிபட்டுப் பின் அந்த பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்திடும்,  எளிய வழியை உபதேசிக்கிறது..
இந்த இரண்டையும் மையக் கருத்தாகக் கொண்டதே கீழ்கண்ட இரண்டு பத்திகளும். அவைகளை 1000 ஆண்டைக் கடந்தும் தெய்வ ஒளியுடன் திகழும் ஆச்சார்யர் ராமானுஜரின் திருவடிகளில் மலர்களாகச் சமர்ப்பிக்கிறேன்.

ஆயிரம் ஆண்டின்-முன்னே பாரத  நாட்டின்-கண்ணே
ஞாயிறாய் அவதரித்த வைணவம் கண்ட-பொன்னே
தாயினும் பரிந்து-யாரும் உரைத்திட நாமம்-என்ன
ஆயினும் சொல்வேன்-என்றே உரைத்த-நின் கருணை என்னே

என்பதே முடிவின்-முடிவாய்க் கொண்ட-பேர் நின்றார்-பிடியாய்
அவருளே தனியின்-தனியாய் நின்ற-நீ  சொன்னாய்-குருவாய்
எவருமே  உணரும்-விதமாய் இறைவனை அருவின்-உருவாய் 

Thursday, March 31, 2016

1.15 தர்மம்


தர்மம்-தன்னைக் காக்க-தர்மம் வந்து-உன்னைக் காக்குது
இந்த-தர்மம் செய்தி-என்று என்ன-உனக்குச் சொல்லுது
தர்மம்-தன்னைக் காப்பதென்ப துன்னை-நீயே காப்பது
உன்னைக்-காக்க பிறரைக்-காக்க வேண்டும்-என்று அறிந்திடு
லோகம்-முழுதும் சுகித்தல்-வேண்டி நடத்தும்-பூஜை கடந்து-நீ
அகில-லோகம் அனைத்தும்-சுகிக்க வேண்டும்-நிலைக்கு உயர்ந்திடு

பிறரில்-உன்னைக் காணலே-உன் உள்ளத்-தூய்மை சாதனம்
அவரில்-தோன்றும் குறைகள்-உன்-உள் உண்டு-என்று அறிந்துநீ
இயன்ற-வரை முயன்றிடு முயன்று-பார்த்து களைந்திடு
பயின்ற-யோக..மாய்-இதை தெளிந்த-யோகி கூறுவர்
கனன்ற-தீயில் தூசென மாசு-உன்னில் போய்விட
எனது-என்று ஒன்றிலை என்று-சித்தம் ஆய்விட
மனதும்-செத்து ஓய்ந்திட சித்தின்-வித்த..றுந்திட
கணத்தில்-தோற்ற..மாகிடும் துலங்கு-ஞான ஞானமே

_______________

1.14 மோக்ஷம்

யாகம்தன்னில் கிட்டிடாது ஆள்-பலத்துக் கடங்கிடாது
செல்வத்தினால் கிட்டிடாது மோக்ஷமுந்தன் கைப்படாது
சேர்ப்பதனால் கிடைத்திடாது துறப்பதனால் தீமை-ஏது
யாக-யோகத்.. தின்-படாது த்யாகமின்றி தென்படாது

*கைவல்ய உபநிஷத்: ந கர்மனா ந ப்ரஜயா தனேன - த்யாகேன ஏகே அம்ருதத்வமான சுஹ் 

19 தசாவதாரம்
லோகம்யாவின் நாயக..! வேதம்சொன்ன போதக..!
லோகமுய்யக் கருணையால் அவதரித்த மாலவ..!

ஊழில்யாவும் அழியுமுன் உயிர்கள்தன்னைக் காத்திட
அமிழ்ந்தவேதம் தன்னையும் மீட்டெடுத்து தந்திட
அவதரிக்க லாகவே  வடிவெடுத்த மத்ஸம்நீ
அறம்தழைக்க புவியிலே முதலில்வந்த தோற்றம்நீ

அமுதம்கிடைக்க தேவர்கள் அசுரர்சேர்ந்து மந்தர
மலையைக்கொண்டு கடைந்திட மலையும்அமிழ்ந்து முழுகிட
குலைந்தமலையும் நின்றிட நிலைத்துநிற்கும் அச்சென
தன்னைத்தந்து  தாங்கிய குறைபடாத கூர்மம்நீ
இறந்திடாத நிலைபெற  தேவர்களும் உண்டிட
அமுதம்தந்த மோகினி அசுரர்கொன்ற திறமைநீ

அமுதம்உண்டு தேவர்கள் உயிர்பிழைத்து வாழ்ந்தனர்
எனினும்மாந்தர் வாழ்ந்திடும் புவியைக்கவர்ந்து அசுரனாம்
இரணியாக்கன் என்பவன் கடலில்மறைத்து ஒளித்தனன்
கருணையற்ற  நெஞ்சில்நீ   இல்லையென்று  களித்தனன் 
அமிழ்ந்தபுவியை மீட்டுநீ நன்மைசெய்து காத்திட
எழுந்தநல் வராஹமாய் அவதரித்த மாலனே
கடந்தவருடம்  ஆயிரம் தன்னில்நீயும் போரிட
கிடந்துஅசுரன் மாண்டிட கொண்டுபுவியை மீட்டநீ
கருணைகொண்ட தெய்வமே கிடந்தகோல மாலனே..!

அறம்தழைக்க வந்தவ அசுரர்கொன்ற மன்னவ
சிரம்கொழுத்த மமதையால் மதியிழந்த இரணியன்
சிறந்தப்ரக  லாதனை நாமம்சொன்ன பாலனை
இறைந்துகூவி கேட்டது எங்கேஅரி என்பது
உறைந்திருக்கும் இறையவன் நிறைந்திருக்கும் படியவன்
உன்னில்கூட இருக்கிறான் தூணிலேயும் உறைகிறான்
வீணில்ஐயம் ஏனப்பா  அகந்தையினைத்  தள்ளப்பா
சாணில்உயரம் வளர்ந்திடா சிறுவன்சொன்ன சொல்லினால்
ஊனில்மட்டு மேவளர் உளம்வளரா மூர்க்கனாய்
வீணில்கொபம் கொண்டுமே அரக்கன்கொதித்துக் குதித்தனன்
தூணிலேயா இருக்கிறான் ? துணிவில்லாதேன்  மறைகிறான்?
இவனையாநீ தொழுகிறாய் கண்ணீர் விட்டேன் அழுகிறாய்  ?
வதைத்தவனைக் கொல்லுவேன் நினைத்துநெஞ்சில் மகிழ்ந்திடு
புதைந்துமண்ணில் மாண்டிட நேரம்நெருங்க அசுரனும்
விதியில் சொன்னதிப்படி அழியுமவனின்   மனப்படி
சிதைத்துக்  கொல்லத்தூணிலே  எழுந்தநர சிம்மம்நீ
சத்தியத்தைக் காத்திட நித்தியத்தில் சேர்த்திட
சத்தியத்தின் யுகத்திலே முடிவில்வந்த தோற்றம் நீ ..!

பிறந்தத்ரேத யுகத்தில்நீ  புனைந்தவேடம் வாமனன்
நிறைந்தபக்தி கொண்டினும் நெஞ்சில்கொள்ள கந்தையால்
மறந்துபுத்தி ஓர்கணம் பிறழ்ந்ததால் மகாபலி
தருக்கிச்சிரித்துச் சொல்லினன் அடியில்மூன்று  அளந்திட
பெருகிவளர்ந்து நீயுமோ நிறைந்துவானும் பூமியும்
அளந்துநின்றதீரடி சிரித்துநீயும் கேட்டதோ எங்களக்கமூவடி ?
விளங்கிக்கொண்ட பலியுமோ தலைகுனிந்து அமர்ந்தனன்
மோக்ஷபெற  ஒர்படி சத்யமுந்தன் சீரடி
காட்சிதரும் நீயுமே கடவுளின்மேல் ஒர்படி
அளக்கச்சிரத்தைக் காட்டினன் புளகிதத்தில் ஆழ்ந்தனன்
மகிழ்ச்சிகொண்ட அசுரனும் புரிந்துகொண்டான் தெய்வத்தை
இகழ்ச்சிபேசும் மாந்தரோ புரிந்திடாத அசுரரே
சத்யமான வாமனன் புரிந்தநெஞ்சில் ஒர்மனன்*
நித்தியத்தில் உறைந்தநல் ஆதியான வானவன்..!
தர்க்கம்-செய்து வினவிடும் ம் சிறுமை-நெஞ்சி..லே-இலன் ..!

அரசகுலஅக்கிர..மங்கள்தன்னைப்-போக்கவே   வந்தபரசு ராமன்நீ
விரைவில் கொடுமை களைந்திட தோன்றியநல் அந்தணன்
புரிந்திடவே ராமன்சொல்ல பிறகுகோபம் தணிந்தனை
பெரிதெனவே அவனைக்கொண்டு வணங்கியேநீ சென்றனை..!

உன்னைப்போல  தந்தையின் சொல்லைக்கேட்க யாருளர்
பின்னர்தோன்றும் யாருமுன் பேரைச்சொல்வ..தோடுளர்
என்னேஉந்தன் தோற்றமே என்னேஉந்தன் நெஞ்சமே
மனதைமயக்கும் மன்னனே மனதில்திகழும் ராமனே ..!

த்ரேதம்கழிந்து சென்றது த்வாபரமும் வந்தது
ப்ரேதம்-போல வாழும்-மாந்தர் ஆன்ம-உணர்வு செத்தது
ஒருவனாக இல்லைநீ இருவராக வந்தது
பெறுவதான பாக்யமாய் அமைந்துதானே போனது

லீலைசெய்யும் கண்ணனாய் உடலின்பல ராமனாய்
பாலசோத..ரர்என இரண்டினவ..தாரம்-நீ..!

கோலம்கெடும் கலிவரும் முன்னர்வந்த போரிலே
ஜாலம்செய்த மன்னனே  தர்மம்காத்த கண்ணனே
ஓலம்செய்த த்ரௌபதி மானம்-காத்த அண்ணலே

ஞாலமுய்ய ஓர்முறை சொன்னதுநீ ஓர்உரை
காலமாகிப் போனது பார்த்தனுக்கே ஆனது
பாதைகாட்டும் கீதையை போதைநீக்கும் காதையாய்
புத்திஎட்ட சொன்னது சேவைசெய்து  காட்டிநீ
சத்தியத்தின் வடிவமாய் கலியில் தோன்றிநின்றது
நித்தியத்தில் நீதரும் கருணைகலந்த  வித்துமாய்  
பக்தியுள்ளோர் நெஞ்சிலே கல்கிஎன்றே ஸ்புரிக்குது...!

ஒர்மனன்* = மனத்தில் வசிக்கக் கூடியவன்

Tuesday, January 5, 2016

இவர் என்று-இல்லை ( குறையொன்றுமில்லை – M.S )
இவர் என்று-இல்லை அவர் என்று-இல்லை எவர்க்கும்-நீ தந்தாய் ஐயா
எவர்க்கும்-நீ தந்..தை-தாய் ஐயா
(2)
கண்கண்ட தெய்வம்-போல் மண்-வந்தாய் ஐயா
கண்..ணு-மண் தெரியாமல் அருள்-செய்யும் உனக்கு 
எவர்-என்று இல்லை அருள்-அள்ளித் தந்தாய்
வேண்டிடவே பக்தர்கள் வேண்ட-எண்ணி நின்றிருக்க
வேண்டியதன்-மேல் உந்தன் அருள்-தந்த தந்தாய்
விஸ்வேசா வாகீசா சர்வேசா சர்வேசா சர்வேசா சர்வேசா 
(music)
குறை-என்ன உன்னைக்-கண்ட பின்னால் ஐயா

குறை-என்ன உன்னைக்-கண்ட பின்னால் 
என்-போல் கடையோர்க்கும் ஸ்வாமி-உன் அன்புப்-பால் வார்த்தாய்
(2)
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உனக்கில்லை ஐயா (2)
உன்னைப்-போல் ஒரு-தெய்வம் மண்ணுக்கு வருமா (2)
என-ஏங்கும் என்-போல் பலர் உண்டு ஐயா (2)
விஸ்வேசா வாகீசா சர்வேசா சர்வேசா சர்வேசா சர்வேசா 
(Music)
தெய்வமே-உன்குரலில் தர்மமே வழங்கி 
நிலையாக நெஞ்சினில் நிற்கின்றாய் சங்கரா 
(2)
ஹே-தேவ தேவா ஜெய-சங்கரேந்த்ரா
பாரில் கிடைக்காத குருதேவா (2)
உன்தாளே ஊழை விரைந்தழிக்கும் அருளின் ஓர்எல்லை 
கண்டு-தொழுதிட வேறெதுவும் எதற்கு (2)
என்றும் அதுபோதும் எது-வேணும் ஐயா  (2)
விஸ்வேசா வாகீசா சர்வேசா சர்வேசா 
சர்வேசா சர்வேசா சர்வேசா சர்வேசா
சர்வேசா சர்வேசா
___________

சந்திர சேகர சத்குருவே ( செந்தமிழ் நாடெனும் போதினிலே)
சந்திர சேகர சத்குருவே எங்கள் உள்ளம் நிறைந்த இறை உருவே
கொஞ்சம் உன்னருள்-பார்வையி..னால்-எனையே-கண்டு நின்னருள் செய்யணும் சத்குருவே
சங்கர (5) சந்திர சேகரமே  சங்கர (5) சந்திர சேகரமே
வேதத்தின்-நாயகன் நீ-தானே-அந்த சந்திர சூடனும் நீ-தானே
நாத-மயம்-எனச் சொல்லிடும் ஓம்-எனும் அந்த-ப்ரணவமும் நீ-தானே
சங்கர (5) சந்திர சேகரமே  சங்கர (5) சந்திர சேகரமே
தாமரைப்-பூம்பதம் கொண்டேகி-நீ சென்று-நடந்ததால் இப்பாரில்
பலர் நல்லறம்-செய்துந்தன் பண்பாடித்-தங்கள் உள்ளம்-களித்தனர் கொண்டாடி
சங்கர (5) சந்திர சேகரமே  சங்கர (5) சந்திர சேகரமே

அத்தனைத் துன்பங்க..ளும்-உந்தன்-பார்வையில் சென்று-மறையுதடியோடு
செல்வம் அத்தனையும்-துச்சம் என்றாச்சு-உந்தன் பொன்னடி-கண்டிட்ட பிற்பாடு
சங்கர (5) சந்திர சேகரமே  சங்கர (5) சந்திர சேகரமே
கல்வி-எனக்கென்று வேறேது-எந்தன் தெய்வம்-உன்-கு..ரல்-உள்..ள போது
சத்ய வாக்கெனத்-தோன்றிடும் உன்குரல்-கேட்டிட போகும்-எனக்கும் நல்ல-போது
சங்கர (5) சந்திர சேகரமே  சங்கர (5) சந்திர சேகரமே
செல்லுமிடமெங்கும் நல்லறமே சொல்லி மானிடத்தின்-அறி..யாக்-கேடு
தன்னைப் போக்கி-மனிதர்க்கு நல்வழி-காட்டிய அய்யா-உனக்கெது ஒரீடு
சங்கர (5) சந்திர சேகரமே  சங்கர (5) சந்திர சேகரமே
உந்தன்-பதம்-இங்கு வந்தருள்-செய்தது நல்லவர்-செய்த தவப்பலனே 
கண்டு பண்ணில்-உரைத்திட ஜன்மம்-குறைத்திட கொண்டிலன் நான்-ஒரு நல்-திறனே  
சந்திர சேகர சத்குருவே எங்கள் உள்ளம் நிறைந்த இறை உருவே
கொஞ்சம் உன்னருள் பார்வையினால் எனையே கண்டு நின்னருள் செய்யணும் சத்குருவே
சங்கர (5) சந்திர சேகரமே  சங்கர (5) சந்திர சேகரமே (n)

________________


Saturday, November 1, 2014

18. சரணாகதி - கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்

சரணாகதி - கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்

கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்
காசிராமசுரம் பத்ரிஅமரபுரம் என்றுசாமியைநான் தேடினேன்
அந்தசாமிஎந்தன் நெஞ்சிலான்மஒளி என்றிருப்பதுநான் காண்கிலேன்
கங்கைகாவிரியும் புனிதமாய்நதிகள் தேடியங்குநீ..ராடினேன்
பக்திநீர்வழிய அன்புத்தந்தைஉனை என்றுநெஞ்சகத்தில் நாடினேன்?

மாயமோகவலை ஆசைப்பாசப்புதை மண்ணில்கால்புதைக்க ஓடினேன்
ரோஷவேஷத்துடன் வந்தமூடமதி தந்தஆணவத்தி லாடினேன் 
காயமாயமது உண்டுநான்எனது என்றுவாய்கிழியப் பேசினேன் 
மாயும்போதுஅது வந்திடாதுதுணை என்றுநான்அறியக் கூசினேன்
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய் (2)

சொந்தமாய்மனது வந்தநான்எனது என்றதன்னுணர்வு வாட்டுது 
வந்தமாயமிது செல்லுமாபிறகு திறக்குமா மனதுபூட்டது ?
எந்தன்தாய்குழந்தை தந்தைஎன்மனைவி என்றஎண்ணமென்று போவது
இந்தமானுடத்தில் வந்தயாவருமென் சொந்தமென்றுஎன் றாவது ?
பந்தபாசங்களும் வந்தநேசங்களும் இந்தபூவுலகில் மாயுது 
என்றஎண்ணமிது சென்றுமாய்ந்திடவே நல்லஞானம்உரு..வாகுது 
எந்தஜென்மத்திலும் வந்தயாவருமென் சொந்தசோதரரே..யாவது 
என்றஞானம்வர அன்புத்தந்தைஉன் அருளுக்காக மனம் ஏங்குது
 கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய் (2)

அன்புதெய்வம்என்று நன்குநான்எழுதி சொல்லினேன்எனது பாட்டிலே
அந்தஅன்புவர செய்யும்சேவைதனை விட்டுத்தூங்கினேன் வீட்டிலே
முன்புராமனுமாய் பின்புகண்ணனுமாய் வந்தஉன்அருமை உணர்ந்திலேன்
அன்புமுழுவதுமாய் மண்ணில்உன்வடிவைக் கண்டபின்னும்மனம் தெளிந்திலேன்
ஐயகோஎனக்கு நல்லபுத்திதரும் ஆன்மஜோதி என்றுஒளிர்வது
ஐயமோஉனக்கு எந்தன்-யோக்கியத்தில் என்றுஎன்றுநான் தெளிவது
உய்யவோர்வழியும் தோன்றிடாதுவினை வந்துவந்துஅலைக் கழிக்குது
பைய்யவாயிடினும் செய்யுவாய்அருளை எந்தன்பொறுப்புஇனி உன்னது 
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய் (2)

ஒன்று நான்கிரண்டு என்றுமூச்சுமே நன்குஆடி ஒளிகூடுமா 
நன்கு நான்தொழும் உந்தன்திருவடி எந்தன் நெஞ்சில்தினம் ஆடுமா
என்றுஎன்மனத் தாடல்நிற்குமோ சென்றுசின்மயம் தேடுமோ?
நன்றுநன்றென வந்துஉன்னருள் என்றுஎன்மனதில் கூடுமோ 
அந்த நாள்வரை துன்பப்பாசறை தன்னில்-வாழ்ந்திடுதல் வேண்டுமோ ?
வந்த நாள்முதல் இன்பம்என்றிதை எண்ணிச் சிறைபுகுந்த வாழ்வுமோ? 
அந்த..கன்திரும்ப கொண்டுசெல்லுவதும் பின்னர்திரும்புவது மாகினேன் 
சொந்தம் நீஎனது பந்தமாய்உலகு வந்துகாத்திடுகோ..விந்தனே
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்

ஆசை பக்தியையும் நல்ல-புத்தியையும் கெடுத்துக்குட்டிச் சுவராக்குது
ஆசைவந்துபே..ராசையாகிப்பின் வளர்ந்துநற் செயலைக் கெடுக்குது
ஆசைப்பாதையிலே வந்ததடைகளையே கோபம்விலகச்செய்யப் பாக்குது 
ஓசையின்றிஅது கொஞ்சநஞ்சமாய் வந்தஞானத்தையே நீக்குது
*காசுகாசென சேர்த்துக் காசினைக் காசுகொண்டுநான் பூசினேன் 
**மூசுவண்டறைப் பொய்கை தண்மலர்ப் பாதம்காணநா வரசிலேன்
நேசப் பாதையினை ராசலீலையென வாழ்ந்துகாட்டியகோ-விந்தனே
மாசுதூசென சென்றுபறந்திட அருளைவீசு வசுநந்தனே
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்

* பணப் பைத்தியமாய் செல்வம் சேர்த்துக் காசினை (குற்றங்களை) 
காசு கொண்டு (சேர்த்த செல்வத்தைக் கொண்டு) பூசி மறைக்க முயல்கிறேன்
**மூசுவண்டரையனைய உன் குளிர்ந்த மலர்ப்பாதங்களை உணரக் கூடிய 
பாக்யமும் ஞானமும் பெற்ற நாவுக்கரசன் அல்லேன் நான்.


மண்ணில் உன்பதங்கள் வந்துநர்த்தனமும் நூறுஅற்புதமும் செய்தது 
கண்களதனைதினம் கண்டபோதும்-அகம் காரம்வந்ததனை மூடுது 
அந்தகோவிந்தனை எண்ணுவாய்தினமும் என்றுசங்கரனும் சொன்னது 
எண்ணிடாதுஉனைக் கேட்டிடாததனை செய்யுமென்வினையைக் கொன்றிடு
செய்தபாவங்களும் உலகமாயங்களும் வந்துவந்துபயம் காட்டுது
எந்தன்நெஞ்சம்தனில் அந்தபொன்தனமும் வந்துஆணவத்தைக் கூட்டுது 
அந்தவேதங்களும் சொல்லும்தத்துவமும் எந்தன்அறிவில்எங்கு ஏறுது
உந்தன்பாதங்களை எந்தகாலத்திலும் நெஞ்சிலாடும்படி செய்திடு
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய் (2)

எந்தன்மன்மனது தந்ததொந்தரவு நீக்குபோக்குகோ..விந்தனே
சொந்தமென்றுநிதம் வந்துவல்வினைகள் தருதுதருதுபாழ் சிந்தனை
சித்தம்நின்றுபதம் நன்குதண்ணொளியை வீசுவீசுமா றருளவே
எந்தனிடையும்சுழு முனையும்பிங்கலையும் ஒன்றுசேர்ந்து நடமாடுமே
என்றுஅந்தநிலை வந்துபிறவிஅலை சென்றுஓயும்கோ..விந்தனே
மென்றுமென்றுஎனை தின்றுதின்றுவினை கொன்றுகொன்றுவரும் மெல்லவே
நன்றுநன்றுஎனக் கண்டி..டாமலருள் வந்துதந்திடு கோ..விந்தனே
அன்றுஅன்றுவரை எங்கும்தாவிடுமென் நெஞ்சிலாடணுமுன் சிந்தனை
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்

சாடுசாடுஅடி என்றுதிருமழிசை யாரும்சொன்னதிருப் பாதமே
காடுஆடுபொடி பூசிநின்றதரு கீழமர்ந்தகுரு மூர்த்தமே
கோடிகோடியுகம் கண்டபிரமனையும் தந்தநாபியுடை தந்தையே
மடுவிலாடுமொரு நாகமாடுமிரு பாதம்காட்டுகோ..விந்தனே
கண்டிடாதபடி விண்ணிலாடும்முடி தொட்டிடாதஅடி உன்னது
எண்ணிடாதபடி செய்தகர்மவினை பட்டுவாடும்மனம் என்னது
மட்டிலாதபடி அன்புகொண்டபடி உள்ளஉன்னடியை நாடினேன்
கண்ணிலாடும்படி எந்தன்ஆன்மஒளி காட்டுகாட்டுகோ..விந்தனே
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய் (2)

அன்புகொண்..டிடு உதவிசெய்..திடு துன்புறுத்தலைத் தள்ளிடு
என்றசொன்னது அன்புதந்தையின் வேதவாக்குமாய் ஆகுது 
காலகாலமாய் மண்ணில்ஞானியர் தந்ததத்துவ ஞானமே 
தூலரூபமாய் வந்தபிரமம்நீ சொன்ன வார்த்தையில் தோணுமே
எந்தன் பாடலில் வந்தகூவலைக் கேளுகேளுகோ..விந்தனே
சித்தம்ஆடுகின்ற வெற்றுஆட்டத்தைப் போக்கு-தேவகியின் பாலனே 
எந்தன்ஊடலைப் போக்கவல்லதாய் உள்ளயா..வையினும் நல்லதே 
உந்தன்கூடலால் எந்தன்ஊடலைப் போக்கிநிறுத்து என்தேடலை 
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய்

எந்தன்தாய் மொழியாம் உந்தன்வாய்மொழியைச் சொல்லிச்சொல்லிநான் போற்றுவேன்
எந்தன்மாயவினை நின்றுஓயும்வரை உந்தன்திருவடியில் அரற்றுவேன்
இந்தலோகத்திலும் எந்தலோகத்திலும் உந்தன்திருமொழியே ஒலிக்குதே
அந்தஓம்ஒலியில் வந்தபொன்மொழியை எந்தன்சேய்மொழியில் பிதற்றுவேன்
கைவிடாதே கோவிந்தா நீயே தந்..தை..தாய் (3)

_____________________