உன்னை நினைக்கப்பல மந்திரங்கள் எனக்கெதற்கு
விண்ணைப் பிளக்கும்-விதம் கோஷங்கள் ஏன்-எதற்கு
என்னை நனைத்து-உந்தன் ஈரெழுத்து பேரிருக்கு
என்றே நினக்க-மனம் விட்டதுவும் தானகன்று
சென்றே உன்னுருவே என்-நெஞ்சு முழுது-நின்று
நன்றே எனக்கரிய அனுபவங்கள் அளிக்க-எண்ணி
ஒன்றே என-இருந்த அவ்வுருவும் தானகன்று
சென்றே வெற்றிடத்தைப் *பொற்றிடமாய் மாற்றி-அதில்
கற்றே விளங்காத கற்றைப் பேரொளியை
சற்றே தான்-காட்டி மற்றைக் கருமங்கள்
சற்றேதும் இல்லைஎன்றே அன்பின் பேரொளிக்கே
என்றும் ஏங்குகின்ற நெஞ்சில்-உந்தன் கருணையினால்
சொல்லில் விளங்காத ஈடில்லா பேரமைதி
என்னில் ஸ்புரித்து-எழ என்ன-அது எனநினைக்க
எண்ணம்-தான் இல்லாமல் இருக்குமந்த உணர்வினில்-நான்
என்றென்றும் திளைத்திருக்கும்
நிலையை நிலையாக
நீ அருள நினைத்தனை என்- உய்வைக் காட்டியதை
பொய்யே என-நினைக்கும் இவ்வுலக மாயையினில்
நோயே எனை-நினைந்தே பரிகாரம் தானுரைப்பார்
பேயே எனத்தொடரும் வினைவிளைவு என்றுரைத்தே
பூஜை பல-செய்தேன் என்று-எனைத் தேற்றிடுவார்
அய்யே உனையன்றி எனையன்றி உண்மைதனை
யாரறிவார் ... யாரறிவால்... தானறிவாரோ?!
*பொற்றிடம்=பொன்னின் திடம்
புடம் போடப் போட தன்னை அழகாக மாற்ற ஏதுவாக இடமளிக்கும்